பின்லாந்தில் 4 இலட்சம் மரங்கள் அழிப்பு: கூகுள் நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்!

பின்லாந்தில் தரவு மையங்களை அமைப்பதற்காக கூகுள் நிறுவனம் சுமார் 4 இலட்சம் மரங்களை வெட்டியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

முஹோஸ் மற்றும் ஒட்டன்மாகி ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளைப் பூர்த்தி செய்யாமல் காடுகள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுமார் 13 பில்லியன் யூரோ பெறுமதியான இந்தத் திட்டம், சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் மாசடைதல், வனவிலங்குகளின் வாழ்விட அழிப்பு மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக 93,000-க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ள மனுவில், தரவு மையத் திட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக உள்ளூர் சமூகங்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணிகளை நிறுத்தியுள்ளதாகவும், முஹோஸ் பகுதியில் 130 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மரங்களை மீண்டும் நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும், அழிக்கப்பட்ட காடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நடவடிக்கை போதுமானதல்ல என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Bootstrap