சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலின் இடத்துக்கு எட்டு பேர் போட்டியிடுகிறார்கள்.
சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதியான கய் பார்மலின், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அவரது இடத்துக்கு மற்றொருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஃபெடரல் கவுன்சில் என்ற, வெவ்வேறு துறைகளின் தலைவர்களான 7 பேர் கொண்ட குழுதான் நாட்டை ஆண்டு வருகிறது.
அந்த குழுவிலுள்ள ஒருவர் சுழற்சி முறையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
இந்நிலையில், ஃபெடரல் கவுன்சிலில் இடம் வகித்தவரும், சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஜனாதிபதி பொறுப்பு வகிப்பவருமான கய் பார்மலின், தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.
11 ஆண்டுகளாக அரசில் பங்கு வகித்துவரும் பார்மலின், இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆக, ஃபெடரல் கவுன்சிலில் கய் பாரம்லின் இடத்துக்கு அடுத்த நபரைத் தேர்தெடுக்கவேண்டியுள்ளது.
இந்நிலையில், கய் பார்மலின் இடத்துக்கு ஒரு பெண்ணும் ஏழு ஆண்களும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான தாமஸ் ஏஷி, மைக்கேல் கிராபர், ரெமி வைஸ்மேன், செலின் அமாட்ரூஸ், மார்கோ சிசா, மற்றும் மாகாண அரசாங்க உறுப்பினர்களான ஜீன் பியர் கல்லாட்டி, ஃபிரான்ஸ் ருப்பன் மற்றும் பியர் ஆலய்ன் ஷ்னெக் ஆகியோரே ஃபெடரல் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.