ஃபாக்லாந்து தீவுகளுக்காக களத்தில் இறங்கும் ஜேர்மனி

ஃபாக்லாந்து தீவுகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ஜேர்மனி முன்வந்துள்ளது.

ஃபாக்லாந்து தீவுகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அர்ஜென்டினாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ஜேர்மனி முன்வந்துள்ளது.

அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே (Javier Milei) ஃபாக்லாந்து தீவுகளை தனது நாடு மீட்கும் என்று எச்சரித்திருந்தார்.

அதேபோல், அந்நாட்டின் இராணுவத் தலைவர் தங்கள் அரசாங்கம் மூன்று புதிய வேட்டையாடி அழிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விரும்புவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், ஃபாக்லாந்து தீவுகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், அர்ஜென்டினாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் முன்வந்துள்ளன.

அதாவது, அர்ஜென்டினாவுக்காக மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டவும், அதன் பொலிவிழந்த கடற்படையைப் புதுப்பிக்கவும் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உற்பத்தியாளர்கள் முன்வந்துள்ளனர்.

அர்ஜென்டினாவின் ஆயுதப் படைகளின் கூட்டுப் பணியாளர் தலைவரான அட்மிரல் மார்செலோ டாலே நோகரே இதனை தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் தைசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ், அதன் டைப் 209NG மாதிரிகளை முன்மொழிந்தது.

அதேபோல், பிரெஞ்சு நிறுவனமான நேவல் குரூப் அதன் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது.

அர்ஜென்டினா இதற்கு முன் 1970-களில் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட டைப் 209 வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Bootstrap