மோனா லிசாவைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளிட்ட பல முக்கிய அருங்காட்சியகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, லூவ்ரே அருங்காட்சியகத்தின் வாயில்கள் மூடப்பட்டதால், புகழ்பெற்ற ‘மோனா லிசா’ ஓவியத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

பாரிஸில் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின்போது வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தாலும், பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லூவ்ரே அருங்காட்சியகம் மட்டுமன்றி, பாரிஸ் ஓபரா அமைப்பின் கீழ் இயங்கும் பலே கார்னியே மற்றும் ஓபரா பாஸ்டில் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. மேலும், ‘ஆர்ட் பாசல் பாரிஸ்’ கண்காட்சியின் வார இறுதி நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Bootstrap