மருத்துவ உதவி கோரிய ஈரானிய மாலுமிகள் இலங்கையிலிருந்து புறப்பாடு!

மருத்துவப் பிரச்சினைகள் தொடர்பாக உதவி கோரி விடுக்கப்பட்ட அவசர அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில், காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த வர்த்தகக் கப்பல்களில் இருந்த 40 ஈரானிய மாலுமிகளை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கையை இலங்கை ஒருங்கிணைத்தது.

கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, அதனைச் சாத்தியப்படுத்தியது.

கரைக்கு அழைத்து வரப்பட்ட மாலுமிகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் நேற்று ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Bootstrap