தெற்கு கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது இரு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்தனர்.
அல்-சினாவ் பகுதியில் கூடியிருந்த மக்கள் கூட்டமே இந்தத் தாக்குதலுக்கு இலக்கானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அருகிலுள்ள அல்-மாவாசி பாதுகாப்பான மண்டலத்தில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில், குழந்தைகள் உட்பட மேலும் பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.
வடக்கு காசா நகரில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில், மூவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், 2023 ஒக்டோபர் முதல் இதுவரை 74,544 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், குறைந்தது 175,692 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், காசாவில் உள்ள மருத்துவமனைகளில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதும், 14 பேர் காயமடைந்ததும் பதிவாகியுள்ளது.
ஒக்டோபர் 2025 இல் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு பிறகு, கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் மொத்த எண்ணிக்கை 1,551 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,573 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.