மறைந்த உறவுகளை மறக்காத மக்கள்: மரணத்திலும் தொடரும் பந்தம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், சான் அன்டோனியோ நகரில் மறைந்த உறவுகளை நினைவுகூரும் ‘மரண தின’ நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில், பாரம்பரிய முக அலங்காரங்கள் மற்றும் வண்ணமயமான ஆடைகளை அணிந்த மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

மறைந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூருவதுடன், அவர்களின் நினைவுகளையும் பாரம்பரியங்களையும் இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சிகள், மலர் அலங்காரங்கள் மற்றும் வீதியோர விற்பனைகள் இடம்பெற்றதுடன், இரவு நேரத்தில் ஒளியூட்டப்பட்ட அலங்கார மிதவைகள் ஆற்றில் அணிவகுத்துச் சென்றன.

மரியாச்சி இசைக் கலைஞர்களின் இசையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு, மறைந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமன்றி, கலாசாரத்தையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விழாவாகவும் அமைந்தது.

Bootstrap