பிரேசிலின் தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (80), தனது போட்டியாளரான முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் மகனும் செனட்டருமான ஃபிளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்காவது முறையாக ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில், லூலா 51 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதேவேளை, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஃபிளாவியோ போல்சனாரோ 48 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.