ஸ்பெயினின் மட்ரிட் நகரில் பல நூற்றாண்டுகள் பழமையான ஆடுகள் இடம்பெயரும் பாரம்பரிய அணிவகுப்பு, வீட்டு வசதிக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மாற்றுப் பாதையில் நடத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள் வழியாக அழைத்துச் செல்லப்படும் இந்த நிகழ்வு, இம்முறை புவேர்டா டெல் சோல் பகுதியில் போராட்டக்காரர்கள் அமைத்துள்ள முகாமைத் தவிர்த்து நடைபெற்றது.
பாரம்பரிய உடையணிந்த இடையர்கள் கால்நடைகளை அழைத்துச் சென்ற இந்த அணிவகுப்பைக் காணப் பெருமளவான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் திரண்டிருந்தனர்.
1994ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த நிகழ்வு, ஸ்பெயினின் பாரம்பரிய கால்நடை இடம்பெயர்வு முறையைப் பாதுகாப்பதையும், கிராமப்புற வாழ்க்கை மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.