நாடாளுமன்றத் தேர்தலைக் முன்னிட்டும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையிலும் மேற்குக் கரையுடனான அனைத்து தரைவழி எல்லைச் சாவடிகளும் நாளை முழுமையாக மூடப்படும் என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
ஹெப்ரன் நகரில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் தீவிர காவல்துறை மற்றும் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அங்கு கடுமையான முடக்கம் தொடர்கிறது.
இந்த நிலையில், பாலஸ்தீனிய தொழிலாளர்கள் இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சோதனைச் சாவடிகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன