பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஈரான் இடையிலான எல்லை வர்த்தகச் சுங்கச்சாவடி நேற்று அதிரடியாக மீண்டும் திறந்துவிடப்பட்டது.
எல்லை மூடப்பட்டிருந்ததால் பாகிஸ்தானில் சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
எல்லை மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நள்ளிரவு முதல் பாரவூர்திகள் இருபுறமும் சீறிப்பாய்ந்து செல்லத் தொடங்கியுள்ளன.
இதனால் போக்குவரத்து சீராகி, பொருட்கள் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் பாரவூர்தி ஓட்டுநர்களும், வர்த்தகர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.