பொலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, தான் கடுமையான அதிர்ச்சியில் இருப்பதாகவும், தன் மீது ஏன் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் காவல்துறை விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
"நான் இன்னமும் இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எனக்கு யாரோடும் எவ்விதப் பகையும் கிடையாது, அப்படியிருக்க என் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட என்ன காரணம் என்று புரியவில்லை" என புலனாய்வு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை ஜூஹு பகுதியில் கால்பந்து விளையாடிவிட்டுத் திரும்பும்போது, உந்துருளியில் சென்றவர்கள் டைகர் ஷெராஃபின் சிற்றூந்தைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் சிற்றூந்தின் கண்ணாடி உடைந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.