அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளில் மிகப்பெரிய சவால்கள் ஏற்படும் : பில் கேட்ஸ் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளில் மிகப்பெரிய சவால்கள் ஏற்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

“வாடிக்கையாளர் ஆதரவு (Customer Support) மற்றும் 'கணக்கியல்' (Accounting) போன்ற அலுவலகப் பணிகள் எதிர்காலத்தில் குறைந்த செலவில் AI மூலமாகச் செய்யப்படும்.

உடலியக்கப் பணிகள்: விவசாயம், வீடு கட்டுதல் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற வேலைகளை 'ஹியூமனாய்டு' (Humanoid) ரோபோக்கள் மேற்கொள்ளும்.

இந்தக் கடினமான மாற்றங்களுக்குப் பிறகு, மனிதர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்து உலகம் செழிப்படையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Bootstrap