பிரித்தானியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றான ஸ்டான்ஸ்டெட் வானூர்தி நிலையத்தில் (Stansted Airport) ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக, நூற்றுக்கணக்கான வானூர்திகள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையத்தில் ஏற்பட்ட இந்தச் திடீர் மின்தடையால், பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் பொதிகளை கையாளுதல் உள்ளிட்ட பல முக்கிய மின்னணு அமைப்புகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக, வானூர்தி நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிட்டதுடன் கடும் அவதிக்குள்ளாகினர்.
தரவுத் தகவல்களின்படி சுமார் 250 வானூர்திகள் தாமதமாகியதோடு சில சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வானூர்தி நிலைய நிர்வாகம் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. இதன் பலனாக, மாலைக்குள் அனைத்து அமைப்புகளும் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்ததாக நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வானூர்தி நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், ஒத்துழைப்பு நல்கியமைக்கு நன்றியும் கூறியுள்ளது.