சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை இலக்காகக் கொண்டு யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை, சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த ஏவுகணையை இடைமறித்ததாக, கூட்டுப் படையின் பேச்சாளர் கேணல் துர்கி அல் மாலிகி தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.