திமுக முன்னாள் பாடசாலை கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பாடசாலைகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துவதற்கான அனுமதி உள்ளிட்ட அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 177 தனியார் பாடசாலைகளிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி, சென்னை மற்றும் திருச்சியில் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று(26) சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.