ஈரான் மீது தாக்குதல் இல்லை! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஈரானுடன் உடன்பாடு எட்டுவதா அல்லது இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா மீண்டும் நடத்தக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரித்து இருந்தார். இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவிய நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தப்போவது இல்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பை ட்ரம்ப் முழுமையாக நிராகரிக்கவில்லை. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

6 மாதங்களுக்கும் மேலாக ஈரான் - அமெரிக்கா சண்டை நீடித்து வரும் நிலையில் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர, கட்டார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்புக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் முயற்சி செய்து வருகின்றன.

Bootstrap