லெபனானில் அதிகரிக்கும் இராணுவ நடவடிக்கை: பெய்ரூட் மற்றும் தாஹியே பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை!

லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் குறிப்பாக அதன் தெற்குப் பகுதியான தாஹியே (Dahieh) உள்ளிட்ட இடங்களுக்கு அமெரிக்க குடிமக்கள் எவரும் பயணம் செய்ய வேண்டாம் என பெய்ரூட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் கண்டிப்பான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வானூர்தி தாக்குதல்கள், ரொக்கெட் வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உள்ளிட்ட ஆயுதமேந்திய தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை மிக சீரற்றதாக மாறியுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் எந்த நேரமும் விழிப்புடன் இருக்குமாறும், அவசர நிலைமை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து (shelter in place) உள்ளூர் ஊடகச் செய்திகளையும் அதிகாரிகளின் வழிகாட்டல்களையும் தவறாது பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவசர உதவிகள் தேவைப்படும் அமெரிக்க குடிமக்கள் +961 1 961 100 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது BeirutACS@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தூதரகத்தைத் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Connection failed: Operation not permitted