அமெரிக்காவில் பெற்றோல் விலை உச்சம்: பைடன் கால சராசரியைத் தாண்டிய ட்ரம்ப் ஆட்சி!

அமெரிக்காவில் எதிர்வரவிருக்கும் இடைத்தேர்தலை (Midterm Elections) முன்னிட்டு, எரிபொருள் விலை உயர்வு பெரும் அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் (இரண்டாவது முறை) பெற்றோல் மற்றும் டீசல் விலை, முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சி‌ காலத்தின் சராசரி விலையைத் தாண்டி அதிகரித்துள்ளது.

ட்ரம்பின் தற்போதைய ஆட்சியில் ஒரு கேலன் பெற்றோல் சராசரியாக $3.472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது பைடன் ஆட்சிக் காலத்தின் சராசரியான $3.471-ஐ விட அதிகமாகும்.

யுக்ரைன் மற்றும் ஈரான் மோதல்களால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ட்ரம்பின் காலத்தில் டீசல் சராசரி விலை $4.343 ஆக உள்ளது (பைடன் காலத்தில் இது $4.078 ஆக இருந்தது).

நவம்பர் 3-ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எரிபொருள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ட்ரம்பின் மீதான பொதுமக்களின் ஒப்புதல் மதிப்பீடு (Approval Rating) சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap