குழிக்குள் 491 நாட்கள் தவிப்பு: தன் கால்களைத் தானே துண்டித்துக்கொண்ட யுக்ரைன் வீரர்!

ரஷ்ய போர் முனையில் படுகாயமடைந்து, சுமார் 491 நாட்கள் ஒரு சிறிய குழிக்குள் தனித்துத் தவித்த யுக்ரைன் இராணுவ வீரர் ஒருவர், இராட்சத ஆளில்லா வானூர்தி மூலம் மீட்கப்பட்டுள்ளார்.

போர் வரலாற்றிலேயே வான்வழியாக ஆளில்லா வானூர்தி மூலம் வீரர் ஒருவர் மீட்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

யுக்ரைனின் 30 ஆவது இயந்திரப் படைப்பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டான்டின் விளாசென்கோ (49) என்ற வீரர், கடந்த 2025 ஜூன் மாதம் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள குபியான்ஸ்க் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.

பெப்ரவரி 2026 இல் நடந்த ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் அவருடன் இருந்த சக வீரர் தாக்குதலுக்குள்ளானார்.

இந்த தாக்குதலில் விளாசென்கோவின் இடது கால் பறிபோனது. வலது காலும் படுகாயமடைந்தது.

காயத்தில் தொற்று உடலில் பரவாமல் இருக்க, தன் வலது காலை அவரே கத்தியால் வெட்டிக் கொண்டார்.

ரஷ்யாவின் தொடர் குண்டுவீச்சால் இடிந்த பழைய பள்ளிக் கட்டிடத்தின் பாய்லருக்கு அடியில் இருந்த 80 x 60 சென்டிமீற்றர் அளவுள்ள சிறிய குழிக்குள் தஞ்சம் புகுந்திருந்தார்.

ரஷ்யாவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்ததால், தரைவழியாக அவரை மீட்க முயன்ற இரண்டு ரோபோக்கள் அழிக்கப்பட்டன.

இதனால் யுக்ரைன் இராணுவம் சிறு ஆளில்லா வானூர்திகள் மூலம் அவருக்கு உணவு, மருந்து மற்றும் வாசிக்க நாவல்களை வழங்கி வந்தது.

இறுதியாக, கடந்த ஓக்டோபர் 4 அன்று மனித எடையைச் சுமக்கும் திறன் கொண்ட 'Ayudag 6' என்ற இராட்சத ஆளில்லா வானூர்தி அனுப்பப்பட்டது.

அந்த ஆளில்லா வானூர்தியில் இணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்துக்கொண்டு, சுமார் 70 மீற்றர் உயரத்தில், 15 கிலோமீற்றர் தூரம் பயணித்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தற்போது அவர் கார்கிவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap