AI முதலீடுகளுக்காக நிதி திரட்ட 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகை: மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் (Microsoft), தனது செலவீனங்களைக் கட்டுப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் பிரம்மாண்ட முதலீடுகளுக்கான நிதியைத் திரட்டும் நோக்கில், சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகைகளை (Voluntary Severance Packages) வழங்க தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகச் செய்திகளின்படி, நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர் படையில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்தச் சலுகையின் கீழ் நன்மையடைய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், மைக்ரோசொப்டின் AI அனுபவங்கள், Copilot, நிதி, மனிதவளம், Xbox மற்றும் Windows + Devices ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இதன் கீழ் விலகுவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சந்தைப்படுத்தல் (Marketing), வர்த்தக வணிகம் (Commercial Business) மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளைச் (Security) சேர்ந்த ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap