பலஸ்தீனர்களால் இஸ்ரேலியத் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

இஸ்ரேலில் இன்று நடைபெறும் 26ஆவது பாராளுமன்ற தேர்தலில் சுமார் 73 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் இஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற பலஸ்தீனர்களும் அடங்குகின்றனர்.

ஆனால், காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் வசிக்கும் பெரும்பாலான பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலியக் குடியுரிமை இல்லாததால், இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.

இதற்கிடையில், தேர்தல் நாளன்று மேற்குக் கரையில் உள்ள நில எல்லைக் கடப்பிடங்களை மூடுவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பு, எல்லை மற்றும் நடமாட்டக் கொள்கைகளால் பாதிக்கப்படும் பலஸ்தீனர்களுக்கு அந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை இல்லாதது, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

Bootstrap