நெதன்யாகுவுக்கு பின்னடைவு: ஆட்சி அமைக்கத் தயார் என ஐசென்கோட் அறிவிப்பு!

நடந்து முடிந்த இஸ்ரேல் பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அங்கு புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், நெதன்யாகுவை எதிர்த்துப் போட்டியிட்ட 'யஷார்' (Yashar) கட்சியின் தலைவர் காடி ஐசென்கோட் (Gadi Eisenkot), தாம் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், மக்கள் "பொய்களால் சலிப்படைந்துள்ளனர்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நடத்துவதில் தமக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த அவர், அதிக அளவிலான வாக்குப்பதிவு இடம்பெற்ற இந்தத் தேர்தலில் மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவது தவறான செயலாகும் என்றார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஏனைய கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மக்களின் முடிவைச் செயல்படுத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது அனைத்துத் தலைவர்களினதும் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Connection failed: Operation not permitted