நீதிமன்றில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்றுமுன் வருகை தந்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்கப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 2026 ஜூன் 3 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் கோட்டாபய ராஜபக்ச மீது வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Bootstrap