பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்தன. உளவுத்தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜோர்டான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும், இந்த தாக்குதலின்போது சிரியாவின் எல்லையோர கிராமங்களான தாரா மற்றும் சுவைடா பகுதிகளில் இருந்த சில வீடுகள் மற்றும் கூடாரங்கள் மீதும் குண்டுகள் விழுந்து வெடித்தன.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு ஜோர்தான் அரசு செய்தி தொடர்பாளர் முகமது அல்-மொமானி அதிகாரப்பூர்வ ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார். சிரிய அரசு இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய வான்வெளிக்குள் அத்துமீறுவது மற்றும் ஆக்கிரமிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்து உள்ளது.
ஆனால், சிரியாவுடன் ஒருங்கிணைந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஜோர்தான் இராணுவம் தெரிவித்தது. எனினும், முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயல்படாமல், தாக்குதல் நடந்துள்ளது என்று சிரிய அரசு கூறுகிறது. இதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.