ஈரானின் அணுமின் நிலைய கட்டுமானத்திற்கு உதவ தயாராகும் ரஷ்யா!

ஈரானின் புஷேர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கு மேலும் கட்டுமானப் பணியாளர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom) அறிவித்துள்ளது.

அங்கு தற்போது இரண்டு புதிய அணுமின் அலகுகள் கட்டப்பட்டு வருகின்றன.

பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, ​​அந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், நவம்பர் மாதமளவில் 200 கட்டுமானப் பணியாளர்கள் இருப்பார்கள் என்று அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அலெக்ஸி லிகாச்சேவ் தெரிவித்தார்.

பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம், திட்டமிட்டபடி 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

நிச்சியமாக, இராணுவச் சூழலில் ஏற்படக்கூடிய தீவிரமான மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். இருப்பினும், தற்போதைய நிலையில் ஒரு சாதகமான சூழல் நிலவும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம் என்று லிகாச்சேவ் தெரிவித்தார்.

Bootstrap