எண்ணெய்க் கசிவு அச்சம்! ஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் தற்காலிகமாக மூடல்

அருகிலுள்ள கடற்பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடற்கரைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எண்ணெய் மாசுபாடு கடற்கரைகளைச் சென்றடைவதைத் தடுக்கவும் விசேட குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே எண்ணெய்க் கசிவு காரணமாக, கடந்த சில நாட்களாக ஷார்ஜா, உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய பகுதிகளில் உள்ள பல கடற்கரைகள் மற்றும் கரையோரப் பகுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Bootstrap