கல்கிசை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் சாரதி, லுனாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.