கனடாவில் மொன்றியலில் 7 மாத குழந்தை ஒன்றுடன் கார் ஒன்று களவாடப்பட்டுள்ளது.காரின் பின் இருக்கை பகுதியில் இந்த 7 மாத குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ரெக்ஸ்ப்ரோ பகுதியில் இந்த வாகனம் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை நிற மெஸ்டா ரக கார் ஒன்று இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
வாகனத்திற்குள் ஏழு மாத சிசு ஒன்று இருப்பது தெரியாமலேயே குறித்த நபர் வாகனத்தை களவாடி சென்றுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.