ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில் ஒன்றுடன் ஒன்று மோதியதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு மற்றும் மனிதத் தவறு ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா (Urda) அருகே கடந்த 28 ஆம் திகதி காலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்து ஏற்பட்டது.
மாட்ரிட்–செவில்லே வழித்தடத்தில் பயணித்த ரென்ஃபே (Renfe) மற்றும் இரியோ (Iryo) நிறுவனங்களின் ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.