உக்ரைனில் தொடரும் ரஷ்யாவின் தாக்குதல் - ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

ரஷ்ய இராணுவம் உக்ரைனில் 2 ரயில்கள் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய உக்ரைனில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 2 ரயில்கள் மீதே ரஷ்யா இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டினிப்ரோ பகுதியில் பயணிகள் ரயில்கள் மீது ‘பயங்கரவாத தாக்குதல்’ நடத்தப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Bootstrap