முன்னாள் போராளி கிருஷ்ணகுமாரை எதிர்வரும் மாதம் நீதிமன்றில் முன்னிலையாக அழைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி கிருஷ்ணகுமார் கந்தசாமியை எதிர்வரும் 12.11.2026 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், இன்று வியாழக்கிழமை பிற்பகல் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர் சொந்தப் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Bootstrap