அமெரிக்காவில் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும், ஈரானின் பதிலடியை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மத்திய கிழக்கு நாடுகளிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ், இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதையும் முறிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.
வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவடைந்த பின்னர் ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொள்ளவது தொடர்பாக ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கக்கூடும் எனவும், ஈரான் அதற்கு பதிலடி கொடுக்கும் என்பதால் தயார் நிலையில் இருக்குமாறும் மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளிடம் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மற்றும் அதன் சார்பு குழுக்கள் பதிலடி கொடுக்கக்கூடும் என்பதால், இந்த மோதல் இன்னும் நீண்ட காலம் நீடிக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் தயாராகி வருவதாக தூதர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் பதிலடியில் எரிசக்தி நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும் அடங்கும் என்ற எதிர்பார்ப்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நட்பு நாடுகளை அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனில் உள்ள ஹூதி, சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.