அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க காங்கிரஸைக் கட்டுப்படுத்தப்போகும் அரசியல் கட்சி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இது கருதப்படுகிறது.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தற்போது நாளொன்றுக்கு 40 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையான மக்கள் முன்கூட்டியே வாக்களித்து வருகின்றனர்.

கடந்த பல தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை முன்கூட்டிய வாக்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, டெக்சாஸ் மாநிலத்தில் வாக்களிப்பு அதிகரித்துள்ளதுடன், இதுவரை 58 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

இது 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைவிட சுமார் 17.5 இலட்சம் அதிகமாகும்.

இம்முறை அமெரிக்க செனட் சபையின் கட்டுப்பாட்டைத் தீர்மானிப்பதில் டெக்சாஸ் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Bootstrap