ஈரான் தனது ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக இரகசிய வலையமைப்பொன்றைச் செயற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, வெடிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், பெரிய சரக்குப் போக்குவரத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்காக சுமார் 5,000 நிறுவனங்களைக் கொண்ட வலையமைப்பை ஈரான் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், போர் நிலைமைகளுக்கு மத்தியிலும் இந்த வலையமைப்பின் ஊடாக ஈரான் தொடர்ந்து தேவையான பொருட்களைப் பெற்றுவருவதாகக் குறித்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.