மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை என பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (30) காலமானார்.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

'ஜென்டில்மேன்', 'சதி லீலாவதி' , 'அன்னியன்', 'மொழி', 'ரிதம்', 'வின்னர்', 'பட்டியல்', 'தாம் தூம்', 'கல்யாண சமையல் சாதம்' உட்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பெரும்பாலும் பாசமிக்க, நகைச்சுவை உணர்வுமிக்க பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நாடகம், சின்னத்திரை, வெள்ளித்திரை என மூன்று தளங்களிலும் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த வத்சலா ராஜகோபாலின் மறைவுக்குத் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Bootstrap