வெளியீட்டுக்கு முன்பே வசூல் வேட்டை ஆரம்பம் - 15 கோடி ரூபாயைக் கடந்த ‘இராமாயணா’ முன்பதிவு!

பொலிவூட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இராமாயணா’ திரைப்படம், வெளியாகும் முன்பே இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் முன்பதிவு நுழைவுச்சீட்டு விற்பனை 15 கோடி இந்திய ரூபாயைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் 29ஆம் திகதி வரை இந்தியாவில் சுமார் 2.98 இலட்சம் நுழைவுச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக யஷ்ஷும், அனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்துக்கு இந்தியாவில் ஹிந்தி மொழிப் பதிப்புக்கே அதிக வரவேற்பு கிடைத்துள்ளதுடன், மொத்த முன்பதிவு விற்பனையில் 84 சதவீதம் அந்தப் பதிப்புக்காகப் பதிவாகியுள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் முன்பதிவு மூலம் 2.58 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், ரன்பீர் கபூரின் ‘Animal’ திரைப்படத்தின் சர்வதேச வசூல் சாதனையை ‘இராமாயணா’ முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Bootstrap