வாக்குகள் திருடப்பட்டதாக நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரிக் கூட்டணி 53 இடங்களை மட்டும் பெற்றுத் தனிப்பெரும் தொகுதியாக முன்னிலை வகித்த போதிலும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேலியத் தேர்தல் வெளிநாட்டுச் சக்திகளாலும் அரபுக்கட்சிகளாலும் திருடப்பட்டு விட்டது என நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதனடிப்படையில்,

  1. நெதன்யாகு வலதுசாரிக் கூட்டணி: 53 இடங்கள் (ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை)
  2. காடி ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி: 48 இடங்கள்.
  3. அரபுப் பிரதிநிதித்துவக் கட்சிகள் (கூட்டுப் பட்டியல் & ரஅம்): 19 இடங்கள்

வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து லிகுட் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், அரபுப் பிரதிநிதித்துவக் கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவிகள் (கத்தார் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பு) மற்றும் முறைகேடான மென்பொருள்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைத் திரட்டித் தேர்தலைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இம் முறைகேடுகள் தொடர்பாகச் சாட்சியங்களை மத்திய தேர்தல் ஆணைக்குழு (CEC), காவல்துறையினர் மற்றும் ஷின் பெட் (Shin Bet) பாதுகாப்புப் பிரிவிடம் சமர்ப்பித்துள்ளதாக லிகுட் கட்சி தெரிவித்துள்ளது.

Bootstrap