வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர், குழந்தைகளுடன் இணைந்து ஹாலோவீன் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.
இந்த ஹாலோவீன் பண்டிகை வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நேற்று (29) நடைபெற்றது.
இந்த பாரம்பரிய நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி உட்பட இராணுவ வீரர்கள், சட்ட அமுலாக்கப் பிரிவினரின் குடும்பங்கள் மற்றும் வளர்ப்புப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 6,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது இசைக்குழுவினர் 'கோஸ்ட்பஸ்டர்ஸ்' திரைப்படத்தின் தீம் பாடலை இசைத்த போது, ஜனாதிபதி ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில் நடனமாடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
குறிப்பாக, ட்ரம்ப் மற்றும் மெலனியா போன்றே ஆடை அணிந்து வந்த சில குழந்தைகளைக் கண்டு ட்ரம்ப் தம்பதியினர் நெகிழ்ச்சியடைந்து, அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.