ரஷ்யாவின் முன்னணி சுயாதீன செய்தித்தாள் ‘நோவயா கசெட்டா’ மூடத் தீர்மானம்!

ரஷ்யாவின் முன்னணி சுயாதீன செய்தித்தாள்களில் ஒன்றான ‘நோவயா கசெட்டா’ (Novaya Gazeta), தனது எஞ்சியுள்ள ஊடகச் செயற்பாடுகளையும் நிறுத்தத் தீர்மானித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகளின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தித்தாள் அறிவித்துள்ளது.

33 ஆண்டுகள் பழமையான இந்தச் செய்தித்தாளின் மூத்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, நிதி ஆதரவு இழப்பு மற்றும் அதன் ஆசிரியர் பதவி விலகியமை ஆகியவை இந்த முடிவுக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

முன்னாள் சோவியத் தலைவர் மிகைல் கொர்பச்சேவுக்கு வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசுத் தொகையைப் பயன்படுத்தியே இந்தச் செய்தித்தாள் ஆரம்பிக்கப்பட்டது.

புலனாய்வுச் செய்தியறிக்கைகள் மற்றும் ஜனநாயக ஆதரவு நிலைப்பாடுகளுக்காகப் பெயர்பெற்ற ‘நோவயா கசெட்டா’, யுக்ரைன் போர் ஆரம்பமானதிலிருந்து ரஷ்ய அரசாங்கத்தின் மேலதிக அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap