அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரை (Daytona Beach) பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் தொடர்ந்து குறுக்கிட்டதால் ஆத்திரமடைந்தார்.
அமெரிக்க இடைத்தேர்தலின் முக்கியத்துவம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, கூட்டத்தில் இருந்த சிலர் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டு இடையூறு ஏற்படுத்தத் தொடங்கினர்.
தொடர்ந்து பலமுறை குறுக்கீடு செய்யப்பட்டதால் கோபமடைந்த ட்ரம்ப், குறுக்கீடு செய்த நபரைப் பார்த்து, **"வாயை மூடு... முட்டாள்... லூசர்... இவரை உடனடியாக இங்கிருந்து வெளியேற்றுங்கள்"** என்று ஒலிவாங்கி முன்னிலையில் காட்டமாகப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் குறுக்கீடு செய்த நபரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதேவேளை, ட்ரம்பின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக உரக்கக் குரல் எழுப்பி சூழ்நிலையை அமைதிப்படுத்த முயன்றனர்.
அமெரிக்கக் காங்கிரஸின் அதிகாரத்தைக் தீர்மானிக்கும் இந்த இடைத்தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பின் இந்த ஆவேசப் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.