‘கிங்’ படத்தில் இருந்து விலகிய அனிருத் !

ஷாருக்​கான் நடித்​துள்ள திரைப்​படம் ‘கிங்’, இந்த திரைப்படத்தை சித்​தார்த் ஆனந்த் இயக்​கி​யுள்​ளார். ‘பதான்’ படத்​தின் வெற்​றியைத் தொடர்ந்து இரு​வரும் மீண்​டும் இணைந்​துள்​ளனர்.

இந்த திரைப்படத்தில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்​சன் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். கரீனா கபூர் சிறப்​புத் தோற்​றத்​தில் நடித்​துள்​ளார்.

டிசம்பர் 24ஆம் திகதி வெளியாக இருக்​கும் இந்த திரைப்படத்​துக்கு அனிருத் மற்​றும் சச்​சின் - ஜிகர் இணைந்து இசையமைப்​ப​தாக அறி​விக்​கப்​பட்டிருந்த ​நிலை​யில், திரு​மணம் காரண​மாக இந்த திரைப்​படத்​திலிருந்து அனிருத் வில​கி​யுள்​ளார்.

படக்குழுவுடன் பேசி, சுமுக​மாகப் பிரிந்து கொள்ள முடிவெடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த திரைப்​படத்​துக்​காக அனிருத் ஏற்​கெனவே அமைத்​திருந்த தீம் மியூசிக்கை, ஷாருக்​கானுக்கு பரிசாக வழங்​கி​யுள்​ளார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் சச்​சின் - ஜிகர் இந்த திரைப்​படத்​தின் இசைக்​குப் பொறுப்​பேற்​றுள்​ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap