ஒரே ஆண்டில் 1,207 திரைப்படங்களை திரையரங்கம் சென்று படம் பார்த்த இளைஞருக்கு புதிய கின்னஸ் சாதனை!

ஒரே ஆண்டில் திரையரங்கிற்குச் சென்று அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைப் பார்த்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் கிளென்வுட் ஹோஸ்கின் ஜூனியர் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இவர் ஓராண்டில் 1,207 திரைப்படங்களைத் திரையரங்கிற்கு நேரில் சென்று பார்த்து இந்த வியக்கத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சாக் சுவோப் என்பவர் திரையரங்கில் 777 திரைப்படங்களைப் பார்த்ததே உலக சாதனையாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்து கிளென்வுட் ஹோஸ்கின் ஜூனியர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

Bootstrap