செவ்வாயில் நீர் இருந்ததா? 410 கோடி ஆண்டுகள் பழமையான விண்கல் சொல்லும் புதிய கதை!

சஹாரா பாலைவனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு விண்கல், சுமார் 410 கோடி (4.1 பில்லியன்) ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகத்தின் பாறை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

மாலி நாட்டின் சஹாரா பாலைவனத்தில் உள்ள உப்புச் சமவெளியில் கடந்த 2022-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த விண்கல்லுக்கு 'டெகாசா 001' (Teghaza 001) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இளஞ்சிவப்பு நிறத்தில் சுமார் 800 கிராம் எடை கொண்ட இந்த விண்கல்லில் உள்ள எரிமலைக் கனிமங்கள் மற்றும் சிர்கான் படிகங்கள், செவ்வாய் கிரகத்தின் தெற்கு உயர்நிலப் பகுதிகளின் அமைப்புடன் துல்லியமாக ஒத்துப்போகின்றன.

சுமார் 419 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீருக்கும் பாறைகளுக்கும் இடையே ஏற்பட்ட வேதியியல் தாக்கங்களால் இந்த விண்கல் உருமாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரக விண்கற்களிலேயே இதுவே மிகவும் பழமையான ஒன்றாகும். தற்போது வறண்டு காணப்படும் செவ்வாய் கிரகம், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நீர் வளம் நிறைந்ததாக இருந்திருக்கக்கூடும் என்பதை இந்த கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது.

Bootstrap