52 வயதை எட்டிய பிரபஞ்ச பேரழகி

இந்தியத் திரைப்பட உலகின் முன்னணி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று (01) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராய், 1997 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் 'இருவர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 'ஜீன்ஸ்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்' மற்றும் அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' வரை பல வெற்றித் திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார்.

தமிழில் மட்டுமன்றி பாலிவுட் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், 'தேவதாஸ்', 'ஹம் தில் தே சுகே சனம்', 'தூம் 2' போன்ற திரைப்படங்களின் மூலம் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தார்.

மேலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து சர்வதேச அளவில் இந்திய சினிமாவிற்குப் பெருமை சேர்த்தார்.

கலைத்துறையில் இவரது மகத்தான பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2009 ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது. அத்துடன் பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருதையும் இவர் பெற்றுள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் ஐஸ்வர்யா ராய்க்கு உலகெங்கிலும் உள்ள திரைப்படக் கலைஞர்கள், பிரபலங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Bootstrap