இசைமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோருக்கு வரும் 11-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்களது திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறுமா அல்லது சென்னையிலேயே நடக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி (Reception) வரும் 21-ஆம் திகதி சென்னையில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், அனிருத்தின் இல்லத்தில் திருமண வேலைகள் ஒருபுறம் பரபரப்பாகவும், மறுபுறம் கொண்டாட்டங்கள் களைகட்டியும் வருகின்றன.
அண்மையில், அனிருத்தின் வீட்டில் 'Dhol' இசையுடன் சிறப்புக் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் அனிருத் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டு செம ஜாலியாகக் கொண்டாடியுள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனிருத்திடம், ரசிகர்கள் அவரைப் பாடல் பாடுமாறு அன்போடு கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக மைக்கை பிடித்த அனிருத், தனது ஹிட் பாடலான "எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சு டீ..." என்ற பாடலைப் பாடி அரங்கையே அதிர வைத்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி சென்சேஷனல் ஆகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள், "நம்ம அனி திருமணத்திற்கு முழுசா ரெடியாகிட்டாருப்பா! தலைவருக்கு கல்யாணக் கலை வந்துடுச்சு!" என்று ஜாலியாகக் கமெண்ட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.