நடந்தே உலகைச் சுற்றியவர்: 28 ஆண்டுகளுக்குப் பின்னர் குடும்பத்தினரைச் சந்திக்கப் போகும் நெகிழ்ச்சித் தருணம்!

பிரித்தானிய சாகசப்பயணி காரல் புஷ்பி (Karl Bushby), 28 ஆண்டுகளாக உலகம் முழுவதும் மேற்கொண்டு வரும் பாதயாத்திரை பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளார்.

57 வயதான காரல் புஷ்பி, 1998 ஆம் ஆண்டு சிலியின் புண்டா அரேனாஸில் (Punta Arenas) இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். எந்தவொரு போக்குவரத்து சாதனத்தையும் பயன்படுத்தாமல், தொடர்ச்சியாக நடந்து சென்று தனது சொந்த ஊரான இங்கிலாந்தின் ஹல் (Hull) நகரைச் சென்றடைவதையே அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.

இந்த நீண்ட பயணத்தின் போது, அவர் இரண்டு முக்கிய சுய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகிறார்:

பயணம் முடியும் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) திரும்பக் கூடாது.

தூரத்தைக் கடக்க எந்தவிதப் போக்குவரத்துச் சாதனத்தையும் பயன்படுத்தக் கூடாது.

அவரது பயணம் நிறைவடையும் தருணத்தில், அவரை வரவேற்பதற்காக அவரது 36 வயது மகன் ஆடம், 12 வயது பேத்தி, அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அவர் 28 ஆண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்ற அவரது தாயார் வீட்டில் அவருக்காகக் காத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap