உண்மையான அன்புக்கு முன்னால் தோற்றுப்போன மரணம்! கோமாவிலிருந்து மீண்ட கணவர்!

மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும், உண்மையான காதலின் சக்தியால் கோமா நிலையில் இருந்த தனது கணவரை ஐந்து வருட போராட்டத்திற்குப் பிறகு மீட்டெடுத்துள்ள சீனப் பெண்ணின் நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாவோ கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆபத்தில் சிக்கிய மூன்று வயதுக் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தபோது தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார்.

ஜாவோவுக்கு இனி சுயநினைவு திரும்புவது சாத்தியமில்லை என்றும், அவரைத் தொடர்ந்து பராமரிப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் கைவிட்டனர். இருப்பினும், தனது கணவர் மீது கொண்ட உண்மையான காதலின் காரணமாக அவரது மனைவி சாங்மெய் சற்றும் மனம் தளராமல் தினமும் அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி மசாஜ் செய்தும், அவர் காது அருகில் பழைய நினைவுகளைப் பேசியும் தொடர்ந்து பராமரித்து வந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டன.

தற்போது கண் விழித்து மனைவியைப் பார்த்துப் பேசும் அளவிற்கு அவர் குணம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Bootstrap