சீனத் தொடக்க நிறுவனமான (startup) ஃபூரியருடன் (Fourier) இணைந்து மெட்டா நிறுவனம் மனித உருவ ரோபோ (humanoid robot) ஒன்றின் முதன்மாதிரியை (prototype) உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது மெட்டா நிறுவனம் குறித்த ரோபோவின் இரண்டாவது பதிப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
த இன்பர்மேஷன் (The Information) இணையதளம், இந்தத் திட்டம் குறித்த தகவலறிந்தவர்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிக்கையின் உண்மையைச் சுயாதீனமாக இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.