அமெரிக்காவில் ஹாலோவீன் (Halloween) பண்டிகைக் காலத்தில் சாக்லேட் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதாக NIQ சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக ஹேர்ஷி (Hershey) மற்றும் மொண்டலெஸ் (Mondelez) போன்ற முன்னணி சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குவதை அமெரிக்க நுகர்வோர் குறைத்துக் கொண்டுள்ளனர்.
ஒக்டோபர் 17 வரை நிறைவடைந்த 9 வாரங்களில் ஹாலோவீன் சாக்லேட் விற்பனை முந்தைய ஆண்டை விட 33.1 மில்லியன் டொலர் வரை சரிந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் கொகோ (Cocoa) மூலப்பொருளின் விலை உயர்வால் சாக்லேட்டுகளின் விலையும் அதிகரித்தது.
தற்போது கொகோவின் விலை குறைந்திருந்தாலும், அதன் பலன் நுகர்வோருக்கு வந்து சேர மேலும் சில காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சுகாதார விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், அதிக சர்க்கரை கொண்ட சாக்லேட்டுகளுக்குப் பதிலாக குறைந்த சர்க்கரை கொண்ட சிற்றுண்டிகள், யோகட் பூசப்பட்ட உணவுகள் மற்றும் தானியங்கள் அடங்கிய சிறிய ரக பொதிகளை நுகர்வோர் அதிகம் விரும்பி வாங்குவது குறிப்பிடத்தக்கது.